close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த பட ஹீரோ, இயக்குனர் இவர்களா? ஆச்சரிய தகவல்..!

Friday, March 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ’ஆடை’ இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’லியோ’ என்ற படத்தில் தான் பிஸியாக இருப்பதாகவும் இந்த படத்தை முடித்துவிட்டு தான் தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நட்சத்திரங்கள் குறித்த பேச்சு வார்த்தை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்றும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் தற்போது ‘சந்திரமுகி 2’ மற்றும் ’ஜிகர்தண்டா 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு அவர் ரத்தினகுமார் இயக்கும் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.