close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி: இயக்குனரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Thursday, August 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் திரையரங்கிலும் ’O2’ என்ற திரைப்படம் ஓடிடியிலும் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நயன்தாரா நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அந்த படத்தின் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

நயன்தாரா நடித்த மலையாள திரைப்படம் ’கோல்ட்’ என்பதும் இந்த படத்தில் நாயகனாக பிரித்விராஜ் சுகுமாரன் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ராஜேஷ் முருகேசன் இசையில் உருவான இந்த படம் இந்த ஆண்டு ஓணம் திருவிழாவின் போது வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நயன்தாரா ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் நயன்தாரா ஷாருக்கானின் ’ஜவான்’ சிரஞ்சீவியின் ’காட்பாதர்’ உள்பட 5 படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.