close
Choose your channels

நஸ்ரியாவின் முதல் திருமண நாள் கொண்டாட்டம்

Sunday, August 23, 2015 • தமிழ் Comments

நேரம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நஸ்ரியா அதன் பின்னர் தனுஷுடன் 'நய்யாண்டி', மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ், ராஜாராணி போன்ற படங்களில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த நிலையில் திடீரென பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகினார். மீண்டும் அவர் ஒரு மலையாள படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று பஹத்-நஸ்ரியா தம்பதியினர் தங்கள் முதலாவது திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் ஜோடியாக நடித்தபோது உண்மையிலேயே காதல் செய்த பஹத்-நஸ்ரியா, பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். நேற்றுடன் இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் பூர்த்தியானதை அடுத்து இருவரும் கேக் வெட்டி தங்கள் முதலாவது திருமண நாளை மிகச்சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

பஹத்-நஸ்ரியா முதலாவது திருமண நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைபப்டங்களையும் அவர்கள் தங்கள் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த தம்பதிகள் இதே ஒற்றுமையுடன் மேலும் பல்லாண்டு காலம் வாழ நமது வாழ்த்துக்கள்.

Get Breaking News Alerts From IndiaGlitz