close
Choose your channels

சூர்யாவின் என்.ஜி.கே டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி முடித்துள்ள 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 'என்.ஜி.கே' படத்தின் டிரைலர் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு இடைவெளிக்கு பின் செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா இணையும் படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.