close
Choose your channels

சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

Monday, October 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் 'சொடக்கு' பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் வரும் ஜனவரியில் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ள சூர்யாவின் 36வது படம் வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல்ப்ரித்திசிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் இந்த படம் வரும் 2018 தீபாவளி அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே தினத்தில் தான் 'தல 58' படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.