close
Choose your channels

'தளபதி 69' இயக்குனர் பட்டியலில் இன்னொருவர்.. விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர்..!

Tuesday, March 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் தற்போது இன்னொரு இயக்குனரும் அதில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

‘தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் அட்லி, எச் வினோத், வெற்றிமாறன், ஆர்ஜே பாலாஜி, திரிவிக்ரம் உள்ளிட்ட சில இயக்குனர்கள் பரிசீலனையில் இருந்ததாகவும் இன்னும் விஜய் இயக்குனரை முடிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘தளபதி 69’ படத்தை இயக்குபவர் வெற்றிமாறன் தான் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்த பட்டியலில் இன்னொரு இயக்குனர் இணைந்துள்ளார். அவர்தான் விஜய், அசின் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘போக்கிரி’ படத்தை இயக்கிய பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யிடம் பிரபுதேவா ஒரு ஒன்லைன் கதையை கூறியதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதை அடுத்து அவரது பெயரையும் இயக்குனர் பட்டியலில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விரைவில் விஜய் தனது அடுத்த படத்தின் இயக்குனரை முடிவு செய்வார் என்றும் அது பிரபுதேவாவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.