close
Choose your channels

வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி'க்கு இன்று பூஜை

Wednesday, July 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு படத்தின் பூஜை போட்டவுடன் பார்ட்டி வைப்பது சினிமாக்காரர்களின் வழக்கம். ஆனால் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு வித்தியாசமாக 'பார்ட்டி'க்கு பூஜை போட்டுள்ளார். ஆம், வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படமான 'பார்ட்டி' என்ற படத்திற்கு இன்று சென்னையில் பூஜை நடத்தப்பட்டது.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் 'பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20ஆம் தேதி முதல் பிஜி தீவுகளில் நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழுவினர் வரும் 15ஆம் தேதி பிஜி தீவுக்கு கிளம்பவுள்ளனர். அங்கு 52 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னை உள்ள விநாயகர் கோவில் ஒன்றில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் வெங்கட்பிரபு, டி.சிவா, பிரேம்ஜி, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், மிர்ச்சி சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.