close
Choose your channels

'சர்கார்' இடத்தை பிடிக்க 'பேட்ட' முயற்சியா?

Tuesday, November 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்க தளபதி விஜய் நெருங்கிவிட்டார் என்பது தெரிந்ததே. ஆனால் விஜய்யின் 'சர்கார்' இடத்தை ரஜினியின் 'பேட்ட' பிடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆம், விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் இசை வெளியீடு நடந்த பொறியியல் கல்லூரியில்தான் ரஜினியின் 'பேட்ட' படத்தின் இசை வெளியீடும் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தின் முதல் சிங்கிள் வரும் டிசம்பர் 3ஆம் தேதியும் இரண்டாவது சிங்கிள் டிசம்பர் 7ஆம் தேதியும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9ஆம் தேதியும் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை 'சர்கார்' இசை வெளியீட்டு விழா நடந்த பொறியியல் கல்லூரியில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.