close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' சென்சார் தகவல்

Friday, December 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெகுவிரைவில் வெளியிட சன்பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில் வரும் புத்தாண்டு தினத்தில் டீசர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.