close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' முக்கிய கேரக்டரின் புகைப்படம் லீக்: படக்குழு அதிர்ச்சி!

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான ஆதித்த கரிகாலன் கேரக்டரின் புகைப்படம் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் விக்ரம் குதிரையில் செல்வது போன்ற இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து படக் குழுவினர் விசாரணை செய்து வருவதாகவும் இந்த புகைப்படம் எப்படி லீக் ஆனது என்றே தெரியவில்லை என படக்குழுவினர் அதிர்ச்சியில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுபோன்று மற்ற புகைப்படங்கள் வெளியாகாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் லீக்கான புகைப்படத்தை நீக்கவும் படக்குழுவினர் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.