close
Choose your channels

தர்பாரின் 'சும்மா கிழிகிழி' சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்த அனிருத்!

Sunday, November 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

’தர்பார்’படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால்இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தற்போது படக்குழுவினர் தொடங்கிவிட்டனர். 

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என சற்றுமுன் இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

தலைவரின் தர்பார் படத்தின் சும்மா கிழிகிழி’ என்ற பாடல், எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்களின் குரலில் விவேக் அவர்களின் பாடல் வரிகளில் வரும் 27ம் தேதி வெளியாகும் என்று அனிருத் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரஜினி ரசிகர்களின் ‘தர்பார்’ சமூக வலைத்தளங்களில் ஆரம்பமாகிவிட்டது.

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.