close
Choose your channels

தலைவரிடம் இருந்து சர்ப்ரைஸ் வீடியோகால்: நடிகையின் உற்சாகம்

Thursday, September 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ‘தர்பார்’ படத்தின் மும்பை படப்பிடிப்பில் கடந்த சில வாரங்களாக இருந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் மும்பை படப்பிடிப்பில் இருந்தபோது குழந்தை நட்சத்திரமும் பாடகியுமான பிரனிதியிடம் ரஜினிகாந்த் வீடியோகால் மூலம் பேசியுள்ளார். இதனை பிரினிதி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

பாடகி ப்ரினிதி ’அருவி’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘லட்சுமி’ போன்ற படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி ‘அருவி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.