close
Choose your channels

கம்போஸ் செய்த முதல் பாடலுக்கே 10 மில்லியன் பார்வையாளர்கள்: நன்றி தெரிவித்த நடிகர்

Thursday, August 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் இசையமைப்பாளர்களாக மாறுவதும், இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறுபவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் என்பது அனைவரும் தெரிந்ததே. பிரபல இசையமைப்பாளர்களாக இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பதும் அதே போல் நடிகர்களும் சிலர் இசையமைப்பாளர்களாக மாறி பாடல்களை கம்போஸ் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜி சமீபத்தில் இசையமைப்பாளராக மாறினார். அவர் இசை அமைத்த முதல் பாடல் தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ’அதே நேரம் அதே இடம்’ என்ற படத்தில் தான் பிரேம்ஜி இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதும், இந்த படத்தில் இடம்பெற்ற ‘அது ஒரு காலம்’ என்ற பாடல்தான் தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு தெரிவித்துள்ள பிரேம்ஜி அமரன் ’எனது முதல் பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி என்றும், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று என்றும், அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். ஒரு நடிகர் இசையமைப்பாளராக மாறி கம்போஸ் செய்த முதல் பாடலே 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.