close
Choose your channels
U Turn

பிக்பாஸ்: ஓவியா இடத்தை நிரப்புவாரா சீரியல் நடிகை?

Friday, August 11, 2017 • தமிழ் Comments

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை நெருங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு போகப்போக குறைந்துவிட்டது. குறிப்பாக ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்த வாரம் பதிவாகியுள்ள வாக்குகளே இதற்கு சான்றாக உள்ளது.

எனவே இன்னும் மீதியிருக்கும் 50 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சியை இழுத்து கொண்டு செல்ல ஓவியா அல்லது அவருக்கு பதிலாக ஒரு பிரபலம் உள்ளே நுழைந்தால்தான் நிகழ்ச்சி களைகட்டும். 

இந்த நிலையில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கல்யாணம் முதல் காதல் வரை' தொடரின் நாயகி பிரியாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பேசப்பட்டு வருவதாகவும், அவர் பிக்பாஸ் வீட்டுக்கு அனேகமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி  செல்வார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை.

செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் அறிமுகமாகி இன்று சீரியல்கள் மூலம் பிரபலமாகியிருக்கும் பிரியா, பிக்பாஸ் வீட்டில் ஓவியாவின் இடத்தை நிரப்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.