close
Choose your channels

தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும் தேதி-இடம் அறிவிப்பு

Thursday, February 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட சங்க தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 5ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் தேதி, தற்போது ஏப்ரல் 2ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலின் அதிகாரியாக ராஜேஸ்வரன் என்பவர் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் நடைபெறும் இடம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறும் என்றும், பதிவு செய்யப்படும் வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தேர்தலில் விஷால் போட்டியிட தடையில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதால் விஷால் உள்பட நான்கு பேர் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.