close
Choose your channels

'தளபதி 63' இயக்குனர் அட்லியை சந்தித்த 'பேட்ட' டெக்னீஷியன்

Saturday, December 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் புரடொக்சன் டிசைனராக பணிபுரிந்த சுரேஷ் செல்வராஜன், நீண்ட இடைவெளிக்கு பின் தனது நெருங்கிய நண்பரும் 'தளபதி 63' பட இயக்குனருமான அட்லியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த தகவலை புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் தனது நண்பர் அட்லியை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் சுரேஷ் செல்வராஜன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம் சுரேஷ் செல்வராஜன், 'தளபதி 63' படத்திலும் புரடொக்சன் டிசைனராக பணிபுரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.