close
Choose your channels

தங்கத்தில் கட்டில் உள்பட மனைவிக்காக ரவீந்திரன் கொடுத்த பரிசுகள் என்னென்ன தெரியுமா?

Wednesday, September 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் சீரியல் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. மேலும் திருமணத்திற்கு ரவீந்திரன் - மகாலட்சுமி அளித்த பேட்டிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் ரவீந்திரன் - மகாலட்சுமி தம்பதிகள் போட்டோசூட்டிலும் பிஸியாக இருக்கின்றனர் என்பதும் சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது மனைவிக்காக பல பரிசுகளை கொடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தங்கத்திலான கட்டில், ரூபாய் 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாளிகை போன்ற வீடு மற்றும் 300க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள், ஏராளமான நகைகள் ஆகியவை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.