close
Choose your channels

'புலி' ஒளிப்பதிவாளருடன் இணையும் 'மங்காத்தா' நடிகை?

Sunday, October 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'புலி' உள்பட பல முன்னணி நாயகர்கள் நடித்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், 'சதுரங்க வேட்டை' படத்தின் நாயகனுமான நட்டி நட்ராஜ் தற்போது 'எங்கிட்ட மோதாதே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நட்ராஜ் இன்னும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

அறிமுக இயக்குனர் தாஜ் இயக்கவுள்ள ஒரு த்ரில்லிங்கான ரோட் பிலிம் ஒன்றில் நட்ராஜ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நட்ராஜ் கூறியபோது, 'தாஜ் கூறிய கதை என்னை மிகவும் கவர்ந்ததால், அவருடைய இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன். விரைவில் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நட்டி நடராஜுக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. லட்சுமிராய், அஜீத்தின் 'மங்காத்தா' உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.