close
Choose your channels

மாற்றுத்திறனாளி சிறுவனுடன் ராகவா லாரன்ஸின் நெகிழ்ச்சியான சந்திப்பு

Tuesday, November 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், இயக்குனர், நடன ஆசிரியர் என பல்துறைகளில் சிறந்து விளங்கும் ராகவா லாரன்ஸ் திரைத்துறையை தாண்டி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகளில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு அவர் செய்து வரும் உதவி அளப்பரியது.

இந்த நிலையில் அஜித் என்ற மாற்றுத்திறனாளி சிறுவன் ராகவா லாரன்ஸின் தீவிர ரசிகராம். ராகவா லாரன்ஸை அந்த சிறுவன் நேரில் பார்க்க ஆசைப்படுவதாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் தெரியவந்தவுடன் உடனடியாக அந்த சிறுவனை வரவழைத்து, அவரை கட்டியணைத்து அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதனால் அந்த சிறுவன் அடைந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டபோது, 'இன்று அஜித் என்ற அருமையான ரசிகரை சந்தித்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சந்திப்பு நிகழ காரணமாக இருந்த எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.