close
Choose your channels

ராகவா லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

Tuesday, March 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படம் கடந்த மாதம் 17ஆம் தேதியே ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் பைனான்சியர் போத்ரா என்பவர் தாக்கல் செய்த வழக்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வழக்கு பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் வரும் 10ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது

இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த படம் ஒருநாள் முன்கூட்டியே அதாவது மார்ச் 9ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது., இதனால் ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சாய் ரமணி இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.