close
Choose your channels

சசிகுமார் படத்தின் இசையமைப்பாளராக மாறிய நடிகர்

Tuesday, May 31, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வீரபாகு, ரெஜினா நடித்தா 'ராஜதந்திரம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் தர்புகா சிவா என்பவர் ஒரு முக்கிய வேடத்தில் ஹீரோவின் நண்பராக நடித்திருந்தார். இவர் தற்போது சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளராக மாறியுள்ளார்.

ஏற்கனவே வானொலியில் ஆர்ஜேவாகவும், இசையமைப்பில் ஆர்வம் உள்ளவராகவும் இருந்த தர்புகா சிவா, சசிகுமார் தற்போது நடித்து வரும் 'கிடாரி' படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிகிலா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சசிகுமாருடன் 'வெற்றிவேல்' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசாந்த் முருகேசன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.