close
Choose your channels

கமல், ரஜினி பட நாயகிக்கு டாக்டர் பட்டம் கொடுத்த மலேசிய பல்கலைக்கழகம்!

Thursday, December 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைக்கு மலேசியாவின் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ’குருசிஷ்யன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கௌதமி. அதன்பின் ரஜினிக்கு பல படங்களில் ஜோடியாக நடித்த கெளதமி, கமல்ஹாசன்  உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது பாஜகவில் இணைந்து நடிகை கெளதமி அரசியலில் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்துள்ளது. இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அவர் இதுகுறித்து கூறியதாவது:

"மலேசியாவின் ஆசிய மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான கெளரவ முனைவர் பட்டம் பெற்றதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த அங்கீகாரம் எனது பணியைத் தொடரவும், மேலும் உயர்ந்த இலக்கை அடையவும் ஒரு அற்புதமான உந்துதலாக உள்ளது. எனது மனமார்ந்த நன்றிகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் எல்லோருடைய அன்பும், ஆதரவுடனுன் தான் என்னுடைய பயணம் இருந்தது. எதிர்காலத்திற்கான கல்வி மற்றும் வாழ்க்கையை வடிவமைப்பதில் அவர்களின் சிறப்பான பணிக்காக ஆசியா மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்திற்கும், ஆசியா மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் தலைவர், வாரியம் மற்றும் ஆசிரியர்களுக்கும் மீண்டும் எனது நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.