close
Choose your channels

'ரஜினிமுருகன்' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

Wednesday, January 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் என்.லிங்குசாமி தயாரித்துள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படம் பல்வேறு ஃபைனான்ஸ் பிரச்சனைகளை கடந்து நாளை முதல் வெற்றிகரமாக பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸாகயுள்ளது. இந்த படத்திற்கு மிக வேகமாக முன்பதிவு நடைபெற்று தயாரிப்பாளரையும் விநியோகிஸ்தர்களையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் கூடுதலாக ஒரு சந்தோஷமான தகவல் இப்படக்குழுவினர்களுக்கு கிடைத்துள்ளது.
ரஜினிமுருகன்' திரைப்படம் 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளதாலும், வரிச்சலுகை வழங்குவதற்கு தகுதியான படமாக இருப்பதாலும் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் தகவல்கள் வெளிவந்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளை கடந்து வந்துள்ள இந்த படத்திற்கு வரிவிலக்கு சலுகை கிடைத்திருப்பது இந்த படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது..
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள இந்த படம் நாளை வெளியாகும் நான்கு படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.