ரஜினி படம் போன்ற அறிமுகக்காட்சி: சிம்புவின் 'ஈஸ்வரன்' படம் குறித்த ஆச்சரிய தகவல்
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ‘ஈஸ்வரன்’ டீசரை சிம்புவின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தில் சிம்புவின் அறிமுக காட்சி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’காலா’ படத்தில் வரும் அறிமுக காட்சி போலவே இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினியின் ’காலா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது போன்ற ஒரு அறிமுக காட்சி இருக்கும். அதே போன்றுதான் ‘ஈஸ்வரன்’ படத்திலும் சிம்பு கிரிக்கெட் விளையாடுவது போன்ற ஒரு அறிமுக காட்சி இருப்பதாகவும், அதேபோல் மோஷன் போஸ்டரில் இருந்த பின்னணி இசைதான் அறிமுக காட்சியின் பின்னணி இசை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த படத்தின் டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் முக்கிய கேரக்டர்களில் பாரதிராஜா, பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.