close
Choose your channels

எங்கள் இருவருக்கும் ஒரே காதல்.. மஞ்சு வாரியருடன் குக் வித் கோமாளி ரக்சன்..!'

Friday, March 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எங்கள் இருவருக்கும் ஒரே விஷயத்தில் காதல் என்ற கேப்ஷனுடன் குக் வித் கோமாளி ரக்சன், நடிகை மஞ்சு வாரியருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரக்சன் ’கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ ’மறக்குமா நெஞ்சம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’வேட்டையன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருவதை அடுத்து ரக்சன் மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் கேப்டன் ஆக ’எங்கள் இருவருக்கும் பைக்குகள் மீது அதீத காதல் என்றும் அதைப்பற்றி பேசுவது என்றால் எங்களுக்கு நேரம் போனதே தெரியாது என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் உங்களை போன்ற சிறந்த நடிகையுடன் பணிபுரிந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றும் உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளிலும் ஒரு புதிய விஷயத்தை நான் கற்றுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு ’தலைவர் 170’ படத்தின் ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்.

ரக்சனுக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம் என்பது அவரது இன்ஸ்டா பதிவில் இருந்து அனைவரும் தெரிந்திருக்கும். அதேபோல் சமீபத்தில் பைக் வாங்கிய மஞ்சு வாரியரும் தற்போது பைக் பிரியராக மாறிவிட்டார் என்பதால் இருவரும் பைக் குறித்து நிறைய பேசியுள்ளனர் என்பது இந்த பதிவில் இருந்து தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.