close
Choose your channels

கையை எடுங்க ரக்சிதா, வெட்கமா இருக்கு.. ராம்

Friday, November 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஒரு மாதமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.  குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில் இரு அணி போட்டியாளர்களும் தீவிரமாக தங்கள் அணியின் வெற்றிக்காக விளையாடி வருவதால் விறுவிறுப்பு அதிகரித்து வருகிறது மட்டுமின்றி சண்டை சச்சரவு இல்லாத நாளே இல்லை என்ற அளவில் பிக்பாஸ் வீட்டில் தற்போது நிலைமை உள்ளது.

இந்த நிலையில் இந்த சண்டை சச்சரவுக்கு நடுவிலும் சில க்யூட் காட்சிகளும் இடம் பெற்று வருவதை மறுக்கமுடியாது. குறிப்பாக உள்ளே இருந்து வரும் பொருளை எடுப்பதற்காக போட்டியாளர்கள் அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் ராம், ரக்சிதாவிடம் கையை எடுங்கள், எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

ரக்சிதா தனது அணிக்காக உள்ளே இருந்து வரும் பொருளை எடுப்பதற்காக கையை தயாராக வைத்திருக்கும் நிலையில் அந்த கை, ராம் மீது படுகிறது. இதனால் ராம், ‘எனக்கு வெட்கமாக இருக்கிறது, கையை எடுங்கள், எங்கே கையை வைத்து இருக்கிறீர்கள் பாருங்கள்’ என்று வெட்கத்துடன் கூறுகிறார்.

ஆனால் தொடர்ச்சியாக ரக்சிதா கையை எடுக்காமல் இருப்பதை அடுத்து யாராவது இவங்களை கையை எடுத்து சொல்லுங்க என்று பஞ்சாயத்தை கூட்டுகிறார். இந்த க்யூட் காட்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.