close
Choose your channels

ரஜினியால் ஒரு தேர்தலை மட்டுமே சந்திக்க முடியும்: ரங்கராஜ் பாண்டே

Tuesday, December 10, 2019 • தமிழ் Comments

ரஜினிகாந்த் அவர்களுக்கு 70 வயது ஆகி விட்டதால் அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும் என்று பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்க உள்ளதையடுத்து அவரது கட்சியில் பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே இணைவார் என்றும், ரஜினிக்கு அவர் அரசியல் ஆலோசகராக இருப்பார் என்றும் கூறப்பட்டது 

இந்த நிலையில் ரஜினிக்கு அவ்வப்போது ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வரும் ரங்கராஜ் பாண்டே ரஜினி மக்கள் மன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பேசியதாவது: அரசியல் என்பது சாதாரணமானதல்ல. பலம் பொருந்திய திமுக., ஆட்சியில் உள்ள அதிமுக போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்கிற உறுதியை ரசிகர்களான நீங்கள்தான் அவருக்குத் தரவேண்டும். ரஜினிக்கு தற்போது வயது 70. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்" என்றார். 
 

Get Breaking News Alerts From IndiaGlitz