close
Choose your channels

சர்வதேச கவனத்தை பெறும் 'ராட்சசன்'

Saturday, October 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு, அமலாபால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு,அமலாபால், ஜிப்ரான், ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியபோது, 'தன்னுடன் 'உத்தம வில்லன்' படத்தில் பணிபுரிந்த வெளிநாட்டை சேர்ந்த மியூசிக் மிக்சிங் கலைஞர்கள் 'ராட்சசன்' திரைப்படத்தின் ஆங்கில உரிமையை பெற யாரிடம் அணுக வேண்டும் என்று கேட்டதாக கூறினார். எனவே விரைவில் இந்த படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஹாலிவுட் டெக்னீஷியன்களை கவரும் அளவுக்கு ஒரு தமிழ்ப்படம் இருப்பது உண்மையில் பெருமைக்குரிய விஷயம் என்பதில் ஐயமில்லை

பள்ளி மாணவிகளை தேடிப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் கதையான 'ராட்சசன்' படத்தின் மிகப்பெரிய வெற்றி அதன் திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் தான். ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் உள்ள இந்த படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட்டால் நிச்சயம் சர்வதேச கவனத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.