close
Choose your channels

ரெஜினாவை வாழ்த்தி வழியனுப்பி வைத்த கார்த்திக் படக்குழுவினர்

Friday, February 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் திரைப்படமான Mr.சந்திரமெளலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி ரெஜினாவின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினர்களுக்கு  ரெஜினா கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கேக் வெட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தை இயக்குனர் திரு இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.