close
Choose your channels

'சாமி 2' டிரைலர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

Friday, May 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகபெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை அதாவது மே 26ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தூத்துகுடியில் 13 பேர் பலியாகி தமிழகமே சோகக்கடலில் மூழ்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். 'சாமி 2' டிரைலரை வெளியிடும் சூழல் இது இல்லை என்பதை சீயான் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளோம். டிரைலர் ரிலீஸ் ஆகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தற்போது தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம் என்று ஷிபு தமீன் தனது சமூக வலைத்தளத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.