close
Choose your channels

நான் மறைத்து வைத்திருந்த ஒரே ஒரு விஷயம் இதுதான்: சமந்தா

Monday, July 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணத்திற்கு பின்னரும் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் வெளியான 'ஓபேபி' திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்த படம் முதல் மூன்று நாட்களில் ரூ.17 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுவரை மறைத்து வைத்திருந்த ஒரே ஒரு விஷயத்தையும் தற்போது வெளிப்படுத்தியுள்ளேன் என்று கூறி அவர் தனது கணவர் நாகா சைதன்யாவை குறிக்கும் வகையில் 'நாகா' என்ற டாட்டூவை தனது உடலில் வரைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

சமந்தா தற்போது தமிழ்ப்படம் எதிலும் நடித்து வரவில்லை என்றாலும் தெலுங்கில் 'மன்மதடு 2' மற்றும் '96 ரீமேக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 'அறம்' இயக்குனர் கோபிநயினார் இயக்கத்தில் சமந்தா விரைவில் ஒரு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.