close
Choose your channels

ரிலீசுக்கு முந்தைய நாளில் வெளியான 'யசோதா' படத்தின் வீடியோ: செம த்ரில்லிங் போல...

Thursday, November 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா நடித்த ‘யசோதா’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் த்ரில்லிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சுமார் ஒரு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் போதே படம் முழுக்க த்ரில்லிங் காட்சிகளாகத்தான் இருக்கும் என்று தெரியவருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நாளை வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு இந்த வீடியோ ரிலீஸ் ஆன பின்னர் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், முரளி சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹரி - ஹரிஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்த படம் சமந்தாவின் மிகப்பெரிய வெற்றிப் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.