close
Choose your channels

நீண்ட தூக்கத்தில் இருந்து திரும்பிவிட்டேன்: சமந்தா

Wednesday, April 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரானோ ஊரடங்கு விடுமுறையில் கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் ஜாலியான, சீரியஸான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஆனால் கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளம் பக்கமே காணவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த நிலையில் ஒரு சிறு இடைவெளிக்கு பின் தற்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய செல்ல நாயுடன் தூங்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “எனது நீண்ட தூக்கத்திலிருந்து திரும்ப வந்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 28ஆம் தேதிக்கு பின் சமந்தா பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கடந்த ஆண்டு ’சூப்பர் டீலக்ஸ்’, ‘ஓ பேபி’ மற்றும் ‘மஜிலி’ ஆகிய வெற்றி படங்களில் நடித்த சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் படப்பிடிப்பு கொரோனா விடுமுறைக்கு பின் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.