close
Choose your channels

நடிகை சமந்தாவின் கோவில் மற்றும் மசூதி விசிட்: வைரல் புகைப்படங்கள்!

Monday, December 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது தெரிந்ததே. விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் என்பதும் அது மட்டுமின்றி வட இந்திய ஆன்மிகச் சுற்றுலாவுக்கு தனது தோழியுடன் சென்றார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு சென்று உள்ளார். சமீபத்தில் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் என்பதும் அதனை அடுத்து கடப்பாவில் உள்ள மசூதி ஒன்றுக்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் கடப்பா தர்காவுக்கு சமந்தா விசிட் அடித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் யசோதா, சாகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, மேலும் இரண்டு தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.