close
Choose your channels

சசிகுமாரின் வெற்றிவேலுடன் இணையும் சமுத்திரக்கனி

Thursday, April 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார், மியா ஜார்ஜ் நடித்த 'வெற்றிவேல்' திரைப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடும் இந்த படத்திற்காக தமிழகத்தில் சுமார் 300க்கும் அதிகமான திரையரங்குகள் புக் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இடைவேளையில் சமுத்திரக்கனியின் 'அப்பா' திரைப்படத்தின் டிரைலர் திரையிடப்படவுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டர் ஒன்று சற்று முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சசிகுமாரும் சமுத்திரக்கனியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் சசிகுமாரின் 'வெற்றிவேல்' படத்துடன் சமுத்திரக்கனியின் 'அப்பா' டிரைலரை இணைப்பதில் எவ்வித பிரச்சனையும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியுள்ள 'அப்பா' படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்தது மட்டுமின்றி தயாரித்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் தம்பிராமையா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.