close
Choose your channels

சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, May 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஒவ்வொரு வாரமும் திரைப்பட வெளியீட்டு குழுவின் அனுமதியோடு மூன்று திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதியின் அனுமதியை பெற்றுள்ளது.

இந்த படம் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி வெளியிட திரைப்பட வெளியீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கான கடிதத்தையும் தயாரிப்பாளருக்கு அந்த குழு அனுப்பியுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டே இந்த படம் வெளியாக திட்டமிட்டு ஒருசில ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒருசில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு கொண்டிருந்த இந்த படம் தற்போது உறுதியான ரிலீஸ் தேதியை பெற்றுள்ளது

பிரபல இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.