close
Choose your channels

'காந்தி' படத்தை ரசித்த மக்கள் தான் ஹிட்லர் படத்தையும் ரசித்தார்கள்: '800' படம் குறித்து சரத்குமார்

Saturday, October 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிக்கவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ திரைப்படத்திற்கு திரையுலகினர், அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2019-ல் முடிவு செய்யப்பட்டு உருவாகி வரும் 800 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியான நிலையில் பலரும் இதனை சர்ச்சைக்குரிய விஷயமாக கருதி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கலைத்துறை, அரசியல் தலையீட்டு காரணங்களால் சவால்களை எதிர்கொள்வது வருந்தத்தக்கது.

இந்திய நாட்டு வருவாயில் சுமார் 93,000 கோடி ரூபாய் பங்களிப்பை ஊடகங்கள் மற்றும் பொழுபோக்கு துறை வழங்குகிறது. கொரோனா சூழலில் அனைத்து தரப்பினரும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, பல சோதனைகளைக் கடந்து முன்னேற்றம் காண்பதற்காக புதுப்புது படைப்புகளை கொடுக்க தயாராக உள்ள கலைத்துறையின் ஊக்கத்தை தடுக்கின்ற முயற்சி ஏற்படையதல்ல. நாட்டின் வளர்ச்சிக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ இதுபோன்ற நிகழ்வுகள் உதவபோவதில்லை.

காந்தி படத்தை மக்கள் எப்படி விரும்பி ரசித்தார்களோ, அதே அளவிற்கு ஹிட்லர் படத்தையும் மக்கள் விரும்பி ரசிக்கத்தான் செய்வார்கள் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். எந்தவொரு படைப்பிலும் ஒரு இனத்தை இழிவுபடுத்தி காட்சிப்படுத்தக் கூடாதே தவிர, தனிமனிதன் தன் வாழ்க்கையில் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கும் வகையிலான சாதனையாளரின் சரித்திரத்தை தெரிந்துகொள்வதில் தவறில்லை. ஒரு சாதாரண மனிதன் பல போராட்டங்களுக்குப் பிறகு, எப்படி விளையாட்டு துறையில் உச்சநிலையை அடைந்தான் என்பதை சித்தரிக்கும் கதைக்களத்தை வரவேற்க வேண்டும். அதை அரசியல் ரீதியாக மட்டும் அணுகி எதிர்ப்பு தெரிவிப்பது சரியாக இருக்காது. முக்கியமாக கலைஞர்களுக்கு அணை கட்டக்கூடாது. எல்லைகளைக் கடந்து கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு நடிகர் இப்படித்தான் நடிக்கவேண்டும். இந்த கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தால் கலை உலகம் முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாத சூழல் நிச்சயமாக உருவாகிவிடும்.

அனைத்தையும் தாண்டி படமானது தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்பதால் தணிக்கை குழு மீது நம்பிக்கை வைத்து இப்பொதுதே படத்தை பற்றி கருத்துகள் தெரிவித்து படைப்பாளிகளின் முயற்சியை தடுக்கவேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகையும் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா? சன்ரைஸர்ஸ் அணியில் முத்தையா முரளிதரன் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். அந்த அணியின் உரிமையாளர் தமிழர். அதை ஏன் கேள்வி கேட்கக் கூடாது? என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.