close
Choose your channels

'கொடிவீரன்' சசிகுமாரின் 3 நாயகிகள் இவர்கள்தான்!

Tuesday, May 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர், இயக்குனர் சசிகுமார் தயாரித்து நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் 'கொடிவீரன்' என்பதும், இந்த படத்தை 'கொம்பன்' புகழ் முத்தையா இயக்கவுள்ளார் என்பதும் ஏற்கனவே நாம் பார்த்த செய்திதான்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகிகள் என மூன்று நடிகைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சசிகுமாரின் சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்யப்பட்ட இந்த நாயகிகளின் பெயர்கள் மஹிமா, பூர்ணா, சானுஷா ஆவார்கள். சாட்டை மற்றும் 'குற்றம் 23' ஆகிய படங்களில் நடித்தவர் மஹிமா என்பதும் 'தகராறு', முனியாண்டி விலங்கிய 3ஆம் ஆண்டு' உள்பட பல படங்களில் நடித்தவர் பூர்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது.

சசிகுமாரின் கம்பெனி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் 10வது தயாரிப்பு திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தின் டெக்னீஷியன்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.