close
Choose your channels

அஜித் பட நடிகைக்கு விஜய் டெக்னீஷியன்

Friday, March 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' மற்றும் அடுத்து நடிக்கவுள்ள 'விஜய் 60' ஆகிய இரண்டு படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்தவர் பிரபல ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் சத்யா என்பது அனைவரும் அறிந்ததே. 'தெறி' படத்தில் அவருடைய திறமையை பார்த்து, தன்னுடைய 60வது படத்திற்கும் விஜய்யே பரிந்துரை செய்ததாக வந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'போகன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள அகஷ்ரா கவுடாவுக்கும் காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அக்ஷரா கவுடா அஜித்தின் 'ஆரம்பம்' படத்தில் நடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த 'ரோமியோ ஜூலியட்' படத்தை இயக்கிய லக்ஷமணன் இயக்கவுள்ள 'போகன்' படத்தில் மீண்டும் அதே வெற்றி ஜோடியான ஜெயம் ரவி-ஹன்சிகா இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.