close
Choose your channels

பாண்டிராஜ்-கார்த்தி பட நாயகி ஒப்பந்தம்

Saturday, November 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க 'மேயாத மான்' நாயகி ப்ரியா பவானிசங்கர் மற்றும் 'வனமகள்' நாயகி சாயிஷா ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக சாயிஷா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கார்த்தியுடன் ஏற்கனவே 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் சாயிஷா நடிக்கவிருந்தார் என்பதும், ஆனால் அந்த படம் எதிர்பாராதவிதமாக கைவிடப்பட்டதாக கூறப்பட்டதும் அறிந்ததே. சாயிஷா தற்போது விஜய்சேதுபதியுடன் 'ஜூங்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி-சாயிஷா இணையும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.