close
Choose your channels

சீமான் - சிம்பு இணையும் புதிய படம் குறித்த தகவல்

Thursday, December 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனரும் நடிகருமான சீமான் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பிசியாக இருப்பதால் திரைப்படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் குறைத்து கொண்டார். இந்த நிலையில் அவர் நடித்த 'தவம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சிம்பு நடிப்பில் ஒரு படத்தை விரைவில் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த படம் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு ஒரு நல்ல படமாக இருக்கும் என்றும் தனது பாணியில் இருக்கும் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்பு, டாக்டர் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்து முடித்துவிட்டு, இயக்குனர் வெங்கட்பிரபுவின் 'மாநாடு' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். எனவே சிம்பு-சீமான் இணையும் படம் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.