close
Choose your channels

பத்திரிகையாளர்களுக்கு அன்பளிப்பு: மறுபரிசீலனை செய்ய பிரபல இயக்குனர் வேண்டுகோள்

Tuesday, July 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அனைத்து சினிமா விழாக்களிலும் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கப்படாது என்றும், தேனீர் மட்டுமே வழங்கப்படும் என்றும், நடிகர், நடிகை, இயக்குனர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விமர்சகர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது/

இந்த நிலையில் தயாரிப்பாளர்களின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரபல இயக்குனர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது:

படம் வெளியான நாளே பணம் விளம்ரமும் பெற்று தரக்குறையாக ஒருமையில் விமர்சனம் செய்வோர் மீது சட்டநடவடிக்கை நியாயமானது. ஆனால் நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு போக்குவரத்துத்செலவு தருவது நியாயமானது, தயவு செய்து மறுபரிசீலனை செய்யவும், நன்றி' என்று கூறியுள்ளார். சீனுராமசாமியின் கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்/

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.