close
Choose your channels

விஜய்சேதுபதி படப்பிடிப்பில் 'எஞ்சாய் எஞ்சாமி' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நடிகை!

Friday, April 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 46-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க இருப்பதாகவும், டி இமான் இசையமைக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் புகழ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு படப்பிடிப்பு தளத்தில் தனது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் ’என்ஜாய் என்ஜாமி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். விஜய் சேதுபதியின் 46வது படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இது என்றும் அவர் டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.