close
Choose your channels

'2.0' வெற்றி: ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி சொன்ன ஷங்கர்

Friday, November 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான '2.0' படத்தின் முதல் நாள் வசூல் பல சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளது. அனைத்து பத்திரிகைகளும், கோலிவுட் பிரபலங்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து வருவதால் முதல் நாளே இந்த படம் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் '2.0' படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் நெகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துள்ளார். "2.0 படத்தை ரசித்து ஊக்குவித்து கொண்டாடி அதை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. இந்த படத்தை ஆதரித்த ஊடகங்களுக்கும் எங்கள் குழுவின் கடின உழைப்பை மதித்தவர்களுக்கும் நன்றி. 2.0 படத்துக்காக தங்கள் வாழ்வின் ஒரு பகுதியை செலவிட்ட எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி" என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் '2.0' படத்தை பாராட்டிய திரையுலக பிரபலங்களின் டுவீட்டுக்கு தனித்தனியே அவர் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.