close
Choose your channels

குழந்தையுடன் குழந்தையாக மாறிய ஸ்ரேயா சரண்: க்யூட் புகைப்படங்கள்!

Tuesday, February 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தனது மகளுடன் குழந்தையோடு குழந்தையாக சுட்டித்தனத்துடன் விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகிறது.

ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ தனுஷ் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண், ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தையின் புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஸ்ரேயா சரண் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது குழந்தையுடன் விளையாடும் புகைப்படங்களை இணையதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்க்கும் போது இரண்டு குழந்தைகள் விளையாடுவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். தனது குழந்தையுடன் தானும் குழந்தையாக மாறி விளையாடும் ஸ்ரேயாவின் கியூட் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.