close
Choose your channels

பிரபல நடிகையை பிராங்க் செய்த கணவர்: வைரல் வீடியோ!

Thursday, August 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவரை அவரது கணவரே பிராங்க் செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு உட்பட இந்தியாவின் பல மொழிகளின் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் எஸ்எஸ் ராஜமவுலியின் பிரமாண்டமான திரைப்படமான ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது தனது கணவருடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்ரேயா சரணின் கணவர் ஆண்ட்ரி கோசவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் தனது மனைவியைக் பிராங்க் செய்யும் காட்சியை பதிவு செய்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் மாடிப்படிகளில் இறங்கி வரும்போது திடீரென ‘ஹேய் மேடம்’ என்று அவர் அழைப்பதும் திடீரென யாரோ தன்னை அழைப்பதை பார்த்து பயந்து போன ஸ்ரேயா சரண் கத்தும் காட்சிகளும், அதன் பின்னர் தன்னை அழைத்தது தனது கணவர் தான் என்று தெரிந்ததும் ஸ்ரேயா சரண் சிரிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.