close
Choose your channels

ஸ்ரீமந்துடு திரைப்படத்தை அப்பாவுடன் இணைந்து பார்த்த ஸ்ருதி

Friday, August 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகேஷ்பாபுவுடன் ஸ்ருதிஹாசன் நடித்த ஸ்ரீமந்துடு மற்றும் செல்வந்தன் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் நேற்று தனது தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து இந்த படத்தை பார்த்ததாக தகவல்கல் வெளிவந்துள்ளது. அப்பாவுடன் இணைந்து ஸ்ரீமந்துடு படத்தை பார்க்க தயாராகியுள்ளேன் என்று ஸ்ருத்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.


சமீபத்தில் தூங்காவனம் படப்பிடிப்பு நடந்த செட்டிற்கு திடீர் விசிட் அடித்த ஸ்ருதிஹாசன், படப்பிடிப்பை ரசித்து பார்த்ததாகவும், குறிப்பாக கிச்சன் போன்ற செட் ஒன்றில் நடைபெற்ற சண்டைக்காட்சி படப்பிடிப்பை வியந்து பார்த்ததாகவும் சமீபத்தில் வீடியோ மூலம் தனது ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாசன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரபரப்பாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் ஸ்ரீமந்துடு படத்தை பார்த்து ரசித்த நிலையில் நேற்று முன் தினம் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் கே.டி.ராமநாயுடு அவர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாகவும், இருவரும் படத்தை பார்த்து மகேஷ்பாபு மற்றும் ஸ்ருதிஹாசனின் நடிப்பை பாராட்டியதாகவும் தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.