close
Choose your channels

'குற்றப்பரம்பரை' படத்தில் விஜய்காந்த் மகன்? இயக்குனர் யார் தெரியுமா?

Monday, March 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதிய ’குற்றப்பரம்பரை’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் தயாரிக்க பலர் முயற்சி செய்தனர் என்பது தெரிந்ததே. இயக்குனர் இமயம் பாரதிராஜா, தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா ஆகியோர் இந்த படத்தை இயக்க திட்டமிட்டனர் என்பதும், அதன் பிறகு கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் இந்த கதையை ’ஈரம்’ அறிவழகன் படித்து வருவதாகவும் அவர் இந்த படத்தை ஓடிடிக்காக அவர் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ’குற்றப்பரம்பரை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘சுப்ரமணியபுரம்’ ’ஈசன்’ படங்களுக்கு பிறகு இந்த படத்தை சசிகுமார் இயக்க இருப்பதாகவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ’குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க இயக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.