close
Choose your channels

இன்று காலை நடிகர் சித்தார்த்துக்கு திருமணமா? மணமகள் யார்?

Wednesday, March 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று காலை நடிகர் சித்தார்த் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சித்தார்த் கடந்த சில ஆண்டுகளாக பிரபல நடிகை அதிதிராவ் ஹைத்ரி என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இருவரும் இணைந்து சில நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் சமூக வலைதளங்களில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் சித்தார்த்-அதிதிராவ் ஹைத்ரி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்தில் இருவருடைய மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகிய இருவர் தரப்பிலிருந்து இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சித்தார்த் ஏற்கனவே கடந்த 2003ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து அதன்பின் 2007ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.