close
Choose your channels

'ஒரு பொண்ணை தொடனும்ன்னா? சிம்புவின் 'மஹா' படத்தின் அடுத்த டீசர்!

Monday, August 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே ‘மஹா’ படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் இணையதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று இந்த படத்தின் நாயகியான ஹன்சிகாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுவதை அடுத்து இரண்டாவது டீசர் வெளியாகி உள்ளது.

அதில் ’ஒரு பொண்ண தொடனும்ன்னா முதல்ல அவ மனச தொடனும்’ என்ற சிம்புவின் வசனத்துடன் ஆக்ஷன் காட்சிகள் உள்ளது என்பதும், இந்த டீசர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, மானஸ்வி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஜமீல் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில், லட்சுமன் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.